×

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!!

துபாய் : 2024ம் ஆண்டின் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ள 17வது இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

*ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் போனார். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் மிட்செல் ஸ்டார்க்.மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.அடிப்படை விலை ரூ.2 கோடி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் குஜராத் கொல்கத்தா அணிகள் இடையே போட்டி நிலவியது.

*ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு ஏலம் போனார். ஆர்சிபி அணியிடம் போட்டி போட்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற பெருமையை பெற்றார் பேட் கம்மின்ஸ்.கடந்த ஆண்டு சாம் கரணை ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது.

*ரூ.5 கோடிக்கு தென் ஆப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோட்ஸி ஏலம் போனார். அவரை மும்பை அணி விலைக்கு வாங்கியது.

*இந்திய வீரர் ஹர்ஷல் படேலை ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி

*ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா ஓமர்சாயை அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி

*மீண்டும் சென்னை அணியில் ஷர்துல் தாக்கூர். ரூ. 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே அணி

*நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

*அடிப்படை விலையான ரூ. 1.5 கோடிக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

*ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

*இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி

*ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் முதல் வீரராக மே.இ.தீவுகள் வீரர் ரோவ்மன் பவலை ரூ.7.4 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

*2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் UNSOLD ஆனார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

*நியூசிலாந்து வீரர் டாரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலம் போனார். அவரை பஞ்சாப் அணியிடம் போட்டி போட்டு சென்னை அணி ஏலம் எடுத்தது.

*இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக்கை 4 ரூ.கோடி டெல்லி கேப்பிட்டல்ஸ் எடுத்துள்ளது.

*இந்திய வீரர் சேத்தன் சக்காரியா ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை கேகேஆர் அணி ஏலம் எடுத்தது.

*இந்திய வீரர் கே.எஸ்.பரத்தை அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி

*தென் ஆப்ரிக்க வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை டெல்லி அணி ஏலம் எடுத்தது.

*இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் ரூ.4.20 கோடிக்கு ஏலம் போனார். இவரை பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.

*2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.5.80 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் உமேஷ் யாதவ்

*2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.11.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார் அல்ஜாரி ஜோசப்.

*2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.6.40 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ஷிவம் மாவி.

*இலங்கை அணியின் குசால் மெண்டிஸ், ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் இங்கிலிஸ், இங்கிலாந்து அணியின் பிலிப் சால்ட் ஆகியோர் ஏலத்தில் வாங்கப்படவில்லை.

*ரஞ்சி கோப்பையில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் சுபம் துபேவை ரூ.5.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

*இலங்கை பந்துவீச்சாளர் தில்ஷன் மதுஷங்காவை ரூ.4.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி

*இந்திய பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட்டை ரூ.1.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

*2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.8.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் இந்திய வீரர் சமீர் ரிஸ்வி

 

 

 

 

 

 

The post ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!! appeared first on Dinakaran.

Tags : Kolkata Knight Riders ,Mitchell Starc ,IPL ,Dubai ,Indian Premier League ,Dinakaran ,
× RELATED முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல்